தீபாவளி அதுவுமா இப்படியா நடக்கணும்…? மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட சுஹாசினி… வருத்தத்தில் ரசிகர்கள்…!

By Soundarya on நவம்பர் 1, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் ஷாருஹாசனின் மகள் சுஹாசினி.இவர் நடிப்பில் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் பாலைவனச்சோலை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன. அந்த திரைப்படங்கள் இவரின் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. திரைத்துறையில் நடிப்பில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர்.

#image_title

அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருகிறார். 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார்.

   
   

#image_title

 

அவருடன் இணைந்து இந்திரா என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் தற்போது சுகாசினி ஒரு சில நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். அதனைப் போலவே மணிரத்தினம் தொடர்ந்து மிக பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி வருகின்றார்.

#image_title

இந்நிலையில் இவருடைய அப்பாவும், சினிமாவில் மூத்த நடிகருமான சாருஹாசன்  93 வயதிலும் நல்லா ஆக்டிவாக இருந்து வந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Suhasini Hasan (@suhasinihasan)