தீபாவளி கொண்டாடிய சின்னத்திரை பிரபலங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக வலம் வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி தயாரிப்பாளர் ரவீந்திரன், சின்னத்திரை சீரியல் நடிகையான மகாலட்சுமியை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தங்கதுரை. இவர் தன்னுடைய குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் 2 ஆயிரத்து 500க்கும் அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக உயர்திரு 420, ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான சினேகன். இவருடைய மனைவி கன்னிகா. சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நிலையில் தீபாவளி கொண்டாடியுள்ளனர்.
நடிகை நயன்தாராவின் ஐரா இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தேடி தரவில்லை ஆனால் இந்த படத்தில் நடித்த கேப்ரியல்லா செல்லஸ் நடித்த கதாபாத்திரம் பிரபலமானது. இவர் சுந்தரி சீரியலில் நடித்து வருகிறார். இவர் சுருளி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் தீபாவளி கொண்டாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது .
பிரபல நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லி நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து நெற்றிக்கண் டாக்டர், அண்ணாத்த, எதிர்க்கும் துணிந்தவன், பீஸ்ட் ஆகிய படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் 90-களில் சில படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். தற்போது வா வரலாம் வா என்ற படத்தில், கங்குவா படத்திலும் நடித்துள்ளார். இவர் சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்ட நிலையில் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.