சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை நெல்சன் இயக்கினார். ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி வசூல் சாதனை படைத்தது. அடுத்ததாக ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் படம் வெற்றி பெற வேண்டும் என லோகேஷ் முழு முயற்சியுடன் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூலி படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் வில்லனாக நடிக்க மாட்டேன் என கூறி நாகார்ஜுனா அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். இப்போது வந்த தகவலின் அடிப்படையில் பகத் பாஸில் கூலி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் லோகேஷ் மற்றும் தயாரிப்பு நிறுவனத்துடன் பகத் பாசிலுக்கு சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.
அவரை சமாதானப்படுத்தி அழைத்து வந்து கேட்டபோதும் பகத் பாஸில் கூலி படத்தில் நடிக்க மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம். இந்த நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த சவுபின் ஷாஹிரை கூலி படத்தில் நடிக்க வைக்கலாமா என பட குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.