குருவிடமே வேலையை காட்டிய சூர்யா.. மாறனை மொத்தமாக முடித்துவிட்ட பெண் சிங்கம் ..!

By Nanthini on கார்த்திகை 27, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் சூர்யா நடிப்பில் படங்கள் வெளியாகி சுமார் இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் கங்குவா திரைப்படம் வெளியானது. சிறுத்தை சிவா கூட்டணியில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இறுதியில் படம் படு தோல்வியை சந்தித்தது. இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக பட குழுவினர் ஓவர் பில்டப் கொடுத்த நிலையில் ரசிகர்களும் படம் வேற லெவலில் இருக்கப் போகுது என்று எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் வெளியான கங்குவா திரைப்படம் கடைசியில் ஒன்றுமே இல்லாதது போல் ஆகிவிட்டது.

சுதா கொங்கராவுக்கு அனுமதி வழங்கிய சூர்யா… சிவகார்த்திகேயன் நடிப்பில் புறநானூறு உறுதி!

   

மிகப்பெரிய பட்ஜெட்டில் வெளியான இந்த திரைப்படம் பாதி அளவு கூட வசூலிக்கவில்லை. இந்த நிலையில் சூரரை போற்று திரைப்படத்தை இயக்கிய சுதா கொங்கராவின் இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் நடிப்பதற்கு சூர்யா கமிட்டானார். அதில் துல்கர் சல்மானும் முக்கிய வேடத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அது தொடர்பான அறிவிப்பும் வெளியானது. மீண்டும் சூழரைப் போற்று கூட்டணி அமைந்ததால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் சூர்யா இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டதால் தற்போது சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

   

Actor suriya: சுதா கொங்கரா – எஸ்.கே படத்தில் செம வில்லனாம்!.. அது அந்த நடிகரா?!.. - CineReporters

 

அமரன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது புறநானூறு திரைப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட்டாகி உள்ள நிலையில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்க ஸ்ரீ லீலா ஹீரோயினியாக நடிக்கிறார். திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இப்படியான நிலையில் நடிகர் சூர்யா ஹிந்தியில் கர்ணா என்ற திரைப்படத்தில் நடிப்பதால் தான் புறநானூறு திரைப்படத்தை நிராகரித்து விட்டார். தனது மனைவி ஜோதிகாவும் தம்பி கார்த்தியும் நீங்க இப்போ ஹிந்தியில் கர்ணா என்ற ஒரு பிரம்மாண்ட படத்தை பண்ண போறீங்க அந்த சமயத்துல புறநானூறு திரைப்படமும் வெளியான அது நல்லா இருக்காது என்று ஐடியா கொடுத்ததால் அப்போது சூர்யா புறநானூறு படத்தை நிராகரித்து விட்டார்.

சூர்யா, சுதா கொங்கரா படம் டிராப் ஆனதற்கு காங்கிரஸ் கட்சி காரணமா? அதிர்ச்சி தகவல்..! | Tamil Cinema News

ஆனால் தற்போது கர்ணா திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டதால் மீண்டும் சுதா கொங்கராவிடம் சென்று சூர்யா புறநானூறு படத்தை நாம்ப சேர்ந்து பண்ணலாம் என்று கூறியுள்ளார். ஆனால் சுதா கொங்கரா, இல்ல நீங்க நிராகரித்ததற்கு அப்புறம் நாங்க இப்ப சிவகார்த்திகேயன் கிட்ட கம்மிட் பண்ணிட்டோம் அதுக்கான ஃப்ரீ புரொடக்சன் எல்லாம் போய்க்கிட்டு இருக்கு இனிமேல ஒன்னும் பண்ண முடியாது வேண்டாம் என்று நிராகரித்து விட்டார். அரசாணை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக சூர்யா தற்போது ஹிந்தி படத்தை நம்பி பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் புறநானூறு படத்தை கைவிட்டு விட்டார்.