BREAKING: விஜய்க்கு வந்த திடீர் சிக்கல்… கடைசி நேரத்தில் திடீர் மாற்றம்…!

By Nanthini on சித்திரை 4, 2026

Spread the love

திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் வயது மற்றும் வழக்குகள் குறித்த விவரங்களில் குளறுபடிகள் ஏற்பட்டு சர்ச்சையானதைத் தொடர்ந்து, அதனைச் சரிசெய்யும் நோக்கில் பெரம்பூர் தொகுதியிலும் அவர் இன்று திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்கிறார்.

ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் இருந்த விவரக் குறைபாடுகளால் தேர்தல் அதிகாரிகள் பரிசீலனையின் போது எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்புள்ளதால், அந்தச் சிக்கலைத் தவிர்த்து மனு நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. தேர்தல் விதிகளின்படி மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் முன்பு திருத்தப்பட்ட விவரங்களைச் சமர்ப்பிப்பது ஒரு வழக்கமான நடைமுறைதான் என்றாலும், இந்த விவகாரம் தற்போது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.