தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், சங்கீதா மட்டுமே மனு தாக்கல் செய்திருப்பதும், விஜய் இதுவரை எந்த எதிர்மனுவோ அல்லது புதிய மனுவோ தாக்கல் செய்யாததும் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது. நடிகையாக இருந்த ஒருவருடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாகக் கூறி சங்கீதா இந்த முடிவை எடுத்ததாகச் சொல்லப்படும் நிலையில், கடந்த காலங்களில் விஜய்யின் அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் சங்கீதா பங்கேற்காமல் தவிர்த்து வந்ததை ரசிகர்கள் கவனித்து வந்தனர்.
சாதாரண தம்பதியினர் இடையே பிரிவினை ஏற்படும்போது இரு தரப்பும் சட்டப்பூர்வமாக மனு தாக்கல் செய்வது வழக்கம், ஆனால் முதல்வர் விஜய் இதுவரை மௌனம் காப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மௌனத்திற்குப் பின்னால் ஒரு முக்கிய காரணம் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. அதாவது, இந்த விவாகரத்தில் விஜய்க்கு துளியும் உடன்பாடு இல்லை என்றும், காலப்போக்கில் சங்கீதாவின் மனதை மாற்றி மீண்டும் அவரைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ள அவர் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
தனது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள விரிசலை சட்டத்தின் மூலம் தீர்ப்பதை விட, குடும்பப் பெரியவர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் பேசித் தீர்க்கவே விஜய் முயற்சி எடுத்து வருவதாகத் தெரிகிறது. சங்கீதாவின் கோபத்தைப் பொறுமையாகக் கையாண்டு, மனஸ்தாபங்களை நீக்கி மீண்டும் இல்லற வாழ்வைத் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்படுவதால்தான் விவாகரத்து வழக்கில் அவர் தீவிரம் காட்டவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல் விஜய் மற்றும் சங்கீதா மீண்டும் இணைய வேண்டும் என விரும்பும் ரசிகர்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.
