இரவில் ஒட்டுமொத்தமாக மாற்றம்.. CM விஜய் அதிரடி… தமிழக முழுவதும் பறந்த உத்தரவு….!

By Nanthini on ஆனி 16, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஒரே இரவில் 56 ஐ.பி.எஸ் அதிகாரிகளை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த முக்கிய நிர்வாக மாற்றத்தின்படி, நீண்ட நாட்களாகக் காத்திருப்போர் பட்டியலில் இருந்த உமா ஐ.பி.எஸ், சென்னை காவல்துறை தலைமையகத்தின் புதிய டி.ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல புதிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திற்கு ஜெயக்குமார், கடலூர் மாவட்டத்திற்கு விவேகானந்த சுக்லா, திருவள்ளூர் மாவட்டத்திற்கு சாய் ஆகியோரும், விழுப்புரம் மாவட்டத்திற்கு மதிவாணன் மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு கவுதம் ஆகியோரும் புதிய எஸ்பி-க்களாகப் பொறுப்பேற்க உள்ளனர். நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவும் முதல்வர் மேற்கொண்டுள்ள இந்த அதிரடி மாற்றங்கள் தமிழக காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.