அயோத்தி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் பணியாற்றும் அர்ச்சகர்களுக்கான புதிய ஆடைக் கட்டுப்பாடு மற்றும் நெறிமுறைகள் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய விதிகளின்படி, அர்ச்சகர்கள் ராமநந்தி சம்பிரதாயத்தை முழுமையாகப் பின்பற்றி, வெளிர் மஞ்சள் நிறத்திலான பட்டு வேட்டி மற்றும் மேலாடையை மட்டுமே அணிய வேண்டும். ஆடை மட்டுமின்றி அவர்களின் தோற்றத்திலும் சில முக்கிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நெற்றியில் ராமநந்தி திலகம் இடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், முகத்தை முழுமையாகச் சவரம் செய்திருக்க வேண்டும் அல்லது மரபுப்படி ‘பஞ்சகேச’ முறையைப் பின்பற்ற வேண்டும்; மாறாக, தாடி மற்றும் முடிகளைச் சீரற்ற முறையில் அரைகுறையாக வளர்த்து வைத்திருக்கக் கூடாது.
வழிபாட்டு நிகழ்வுகளில் கூடுதல் தூய்மையையும், சிறப்பான ஒழுக்கத்தையும் நிலைநிறுத்தும் நோக்கிலேயே இந்த குறிப்பிட்ட நிறமும் விதிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் வழிகாட்டுதலின் பேரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றங்கள், ஆலயத்தின் புனிதத்தன்மையையும் தொன்மையான பாரம்பரியத்தையும் மேலும் மெருகூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கோயில் நிர்வாகப் பணிகளை மேம்படுத்துவதற்காக அறக்கட்டளைக்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியை தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளும் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் அமைப்பு ரீதியான மாற்றங்களை மேற்கொள்வது குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே முக்கிய…
கேரள பாஜக மாநிலத் துணைத் தலைவரும் பிரபல நடிகருமான தேவன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும்…
திரைப்பட நடிகை த்ரிஷாவுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என அதிமுக மூத்த தலைவர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட பேச்சு…
கர்நாடக மாநிலம் பெங்களூருவின் சிக்கா டுகொடி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் வசித்து வரும் தம்பதியினருக்கு 1.5…
கோவை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யாததால் கடுமையான வறட்சியும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவி…
சென்னையில் 'வி த லீடர்ஸ்' இயக்கம் சார்பில் அதன் தலைவர் அண்ணாமலை தலைமையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில்…