கார் ஓட்டும் போதே திடீர் உடல்நலக்குறைவு…! “பாதசாரிகள் மீது மோதி நின்ற கார்…! துடித்த நபரை உடனே காப்பாற்றிய மக்கள்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!!

By Devi Ramu on ஐப்பசி 2, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாோவில், வழக்கறிஞர் ரிங்கு யாதவ் என்பவர் தனது காரை ஓட்டிச் சென்றபோது, அவருக்குத் திடீரென ஏற்பட்ட கடும் உடல்நலக் குறைவு காரணமாகக் கார் கட்டுப்பாட்டை இழந்து பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வழக்கறிஞர் உள்ளேயே துடித்துக்கொண்டிருக்க, கார் வீதியின் ஓரத்தில் மோதி நின்றது. இதைக் கண்டு பதறியடித்து ஓடிவந்த பொதுமக்கள், உடனடியாகக் காரின் பக்கவாட்டுக் கண்ணாடியை உடைத்து, கதவைத் திறந்து உள்ளே உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த வழக்கறிஞரை வெளியே மீட்டனர்.

   

சாலையிலேயே அவருக்கு முதலுதவியாக உடனடியாக சி.பி.ஆர் வழங்கி, அவரது உயிரைக் காப்பாற்றினர். அதன்பின்னர் அவர் சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான சூழலிலும் பொதுமக்கள் உடனடியாகச் செயல்பட்டுச் செய்த சாதுரியமான சிபிஆர் முதலுதவியால் வழக்கறிஞரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.