திக் திக் நிமிடங்கள்… டிரெட்மில்லில் ஓடிய அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் திடீர் மரணம்… ஜிம்மில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… நெஞ்சை உலுக்கிய பகீர் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 14, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம் சர்தார்ஷஹர் பகுதியில் உள்ள ஒரு ஜிம்மில், டிரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்த 49 வயது அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று ஜிம்மில் வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென நிலைதடுமாறி கீழே சரிந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், இருப்பினும் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

   

https://twitter.com/nextminutenews7/status/2110341690456502532/video/1

   

இந்த திடீர் மாரடைப்பு மரணம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தொடரும் இத்தகைய மாரடைப்பு சம்பவங்கள் உடற்பயிற்சி செய்பவர்களிடையே கடும் அச்சத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளன.