“யோவ்….சித்தப்பா இதெல்லாம் தேவையா…?” ஒன்னுக்கு ரெண்டா…. முதல் மனைவியின் திடீர் கம்ப்ளைன்ட்…. வசமாக சிக்கிய பருத்திவீரன் சித்தப்பு…!!

By Srimathi on புரட்டாதி 4, 2025

Spread the love

90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகர் சரவணன், கடந்த 2003 ஆம் ஆண்டு சூர்யா ஸ்ரீ என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பருத்திவீரன் படத்திற்கு பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியதால் 2015ல் ஸ்ரீதேவி என்ற பெண்ணுடன் லிவ்விங் டுகெதர்ரில் வாழ்ந்தார். 2019 ஸ்ரீதேவி கர்ப்பம் ஆனதும், தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று முதல் மனைவியை சம்மதிக்க வைத்து, ஸ்ரீ தேவியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
தன் இரு மனைவிகளையும் மாங்காடு அருகே, ஒரு அடுக்குமாறு கூறியிருப்பில் குடிவைத்தார். முதல் மனைவி தனியாகவும், இரண்டாவது மனைவி சரவணனுடன் வசித்து வந்த நிலையில், வீடு யாருக்கு சொந்தம்? என்ற பிரச்சனை எழுந்தது.

இந்நிலையில் சூர்யாஸ்ரீ தனது கணவர் சரவணன் மீது, ஆவடி காவல் ஆணையத்தில் புகார் அளித்தார். அதில் கடந்த 1996 முதல் 2003 வரை திருமணம் செய்யாமல் சரவணன் உடல் ஒன்றாக வாழ்ந்து வந்தேன். அதன் பின்பு 2003இல் அவரை திருமணம் செய்து கொண்டேன். ஹவுசிங் பைனான்ஸ் செய்து, அதில் வந்த வருமானத்தில் சரவணன் உடன் வசித்து வந்தேன். பல்வேறு சமயங்களில் அவருக்கு நிதி உதவி அளித்தேன். ஆனால் தற்போது தனக்கு சாப்பாடு போட கூட ஆளில்லை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சரவணனும், அவரது இரண்டாவது மனைவியும் சேர்ந்து தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். தனக்கு பராமரிப்பு தொகையாக 40 லட்ச ரூபாய் தருவதாக கூறி ஏமாற்றி விட்டார் என்று தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

   

மேலும் தனது உறவினர்கள் கொடுக்கும் பணத்திலேயே உயிர் வாழ்ந்து வருவதாகவும், தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு சரவணன் மற்றும் அவர் இரண்டாவது மனைவியே காரணம் என்றார். மேலும் சரவணனின் இரண்டாவது மனைவி தன்னிடம் சண்டை போடும் வீடியோ ஒன்றை போலீசாரிடம் ஒப்படைத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவணனுக்கு  பெரிய தொகை கிடைத்த பொழுது, அதில் தனக்கு பங்கு கொடுக்கவில்லை என சூர்யா ஸ்ரீ போர்க்கொடி தூக்கினார். அதில் சிறிய தொகை கிடைத்தவுடன் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

   

முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்வது தப்பு என்பதை வைத்து, சரவணனை தனது வழிக்கு கொண்டு வருகிறார், சூர்யா. இந்த முறை சரவணன் மீது வழக்கு போடப்படுமா? இல்லை வழக்கம் போல் சமாதானம் ஆகி விடுவார்களா? என்பது போலீசாரின் விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.