புதுச்சேரி ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள தரவு உள்ளீட்டாளர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணினிப் பயன்பாடுகள், பி.டெக் அல்லது பி.எஸ்சி ஆகிய துறைகளில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், கணினி இயக்கத்தில் போதிய அறிவும், நிமிடத்திற்கு 8,000 கீ டிப்ரஷன்ஸ் வேகத்தில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும், இருப்பினும் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் தகுதியுள்ள நபர்களுக்கு மாதம் ரூ. 20,000 முதல் ரூ. 29,200 வரை ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் தட்டச்சுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இதனால் முதலில் ஏப்ரல் 8, 2026 அன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இந்த நேர்முகத் தேர்வுகள், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, திருத்தப்பட்ட தேதியின்படி வரும் மே 6, 2026 அன்று காலை 9:00 மணியளவில் புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் உள்ள நெப்ராலஜி அல்லது மெடிக்கல் ஆன்காலஜி துறையில் நேர்முகத் தேர்வு நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் நேரடியாகக் கலந்துகொண்டு இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
