ஈபிஎஃப்ஓ சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்வது மிக அவசியமாகும். உங்கள் பிஎஃப் கணக்கில் உள்ள வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருந்தாலோ அல்லது தவறான விவரங்கள் இருந்தாலோ, முதிர்வுத் தொகை மற்றும் முன்பணம் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக, பல வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிலையில், பழைய ஐஎப்எஸ்சி குறியீடுகள் இப்போது செல்லாது.
எனவே, உங்கள் தற்போதைய செயல்பாட்டில் உள்ள வங்கிக் கணக்கு மற்றும் சரியான ஐஎப்எஸ்சி குறியீடு பிஎஃப் போர்ட்டலில் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக சரிபார்க்க வேண்டும். இந்த மாற்றங்களைச் செய்ய, உறுப்பினர்கள் ஈபிஎஃப்ஓ-வின் அதிகாரப்பூர்வ வலைதளத்திற்குச் சென்று, பிரிவின் கீழ் புதிய வங்கி விவரங்களைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும் நீங்கள் பதிவேற்றும் புதிய விவரங்கள் உங்கள் முதலாளியால் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும். வங்கி விவரங்கள் சரியாக இருந்தால் மட்டுமே, ஆன்லைன் மூலம் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கான கோரிக்கைகள் தடையின்றி செயலாக்கப்படும். தாமதத்தைத் தவிர்க்கவும், அவசரத் தேவைகளுக்குப் பணம் கிடைப்பதை உறுதி செய்யவும் இப்போதே உங்கள் வங்கி விவரங்களைச் சரிபார்த்து புதுப்பித்துக் கொள்ளுங்கள்.
