#image_title
தமிழ் சினிமாவில் கவுண்டமணி 2.0 வெர்ஷனாக வந்து கலக்கியவர் சந்தானம். லொள்ளு சபாவில் நடித்துக் கொண்டிருந்த சந்தானத்தை சினிமாவுக்கு அழைத்து வந்த பெருமை சிம்புவையும் டி ஆரையுமே சேரும். தொடர்ந்து சிம்பு சந்தானத்தை மன்மதன் மற்றும் வல்லவன் என அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பளித்தார்.
அதன் பின்னர் சந்தானம் பல படங்களில் நடித்தாலும், அவரை முன்னணி நகைச்சுவை நடிகராக்கியது சிவா மனசுல சக்தி திரைப்படம். அந்த படத்தில் அவரின் நகைச்சுவை காட்சிகள் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. அதன் பின்னர் அவர் நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், கலகலப்பு, கண்ணா லட்டு திண்ண ஆசையா ஆகிய படங்கள் அவரை நம்பர் 1 காமெடி நடிகராக்கின.
இதனால் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆனார். பல படங்கள் அவரின் கால்ஷீட்டுக்காக காத்திருந்தன. இந்நிலையில் சந்தானத்தோடு நிறைய படங்களில் இணைந்து நடித்துள்ள சுந்தர் சி அவரின் வளர்ச்சி பற்றி ஒரு சுவாரஸ்ய சம்பவத்தைப் பதிவு செய்துள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய அவர் “நானும் சந்தானமும் இணைந்து ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அப்போது சந்தானம் வளர்ந்து வரும் நடிகர்தான். ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓரமாக உட்கார்ந்திருந்தார். நான் அவரிடம் என்ன சந்தானம் ஷூட் முடிஞ்சுச்சா எனக் கேட்டேன். இல்ல சார் காலைல உக்காந்திருக்கேன். இன்னும் ஒரு ஷாட் கூட எனக்கு எடுக்கல என்றார்.
நான் அந்த இயக்குனர் பாருங்க ஒரு நாள் சந்தானம் கால்ஷீட் கெடைக்காம அலையப் போறீங்க என வேடிக்கையாக சொன்னேன். ஆனால் என் வாய் முகூர்த்தம் அப்படியே பலித்தது. நானும் சந்தானமும் சில ஆண்டுகள் கழித்து ஒரு படத்தில் நடிக்கும்போது சந்தானத்திடம் அந்த இயக்குனர் கால்ஷீட் கேட்க வந்தார்.
அப்போது சந்தானம் என்னிடம் “சார் நீங்க அன்னைக்கு வெளையாட்டா சொன்னீங்க. அது இப்ப நடக்குது. நானும் எவ்வளவோ ட்ரை பண்றேன். அவருக்கு என்னால் ஒரு நாள் கால்ஷீட் கூட என்னால் கொடுக்க முடியவில்லை. நீங்கள் சொன்னது நடந்து விடக் கூடாது என நானும் பார்க்கிறேன்எனக் கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…