பெண்களுக்காக தமிழக அரசு புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த நிலமற்ற விவசாய கூலி பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் விவசாயம் செய்வதற்காக புதிய நிலம் வாங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் தமிழக அரசால் அந்த நிலத்தில் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் மானியமாக கொடுக்கப்படும். மீதி தொகைக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடன் உதவி கிடைக்கும்.
புதிதாக வாங்கும் இந்த நிலத்திற்கான முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 100% முழுமையான விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் பயனாளிகள் நிலத்தை தங்களது பெயரில் பதிவு செய்து கொள்ளலாம். அதிகபட்சமாக 2 1/2 ஏக்கர் நன்செய் நிலம் 5 ஏக்கர் புன்செய் நிலம் வரை இந்த திட்டத்தின் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 18 முதல் 55 க்குள் வயது இருக்க வேண்டும். அவர்கள் விவசாயம் செய்பவராகவோ விவசாயக் கூலியாகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் விடாமல் இருப்பது அவசியம். இதுவரை விண்ணப்பதாராரரோ அவரது குடும்பத்தினரோ தாட்கோ திட்டத்தின் கீழ் மானியம் பெற்றிருக்கக் கூடாது. விண்ணப்பதாரருக்கு சொந்தமாக விவசாய நிலம் இருக்கக் கூடாது.
இந்த திட்டத்தின் மூலம் வாங்கும் நிலத்தை பத்து ஆண்டுகளுக்கு வேறு யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது. வாங்கப்படும் நிலம் எஸ்சி எஸ்டி பிரிவை சார்ந்த நில உரிமையாளர்களிடமிருந்து வாங்க வேண்டும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் newscheme.tahdco.com என்ற தாட்கோவில் அதிகாரப்பூர்வ இனிய தளத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
