மத்திய அரசு அறிவித்த வருமான வரி உச்சவரம்பைத் தாண்டி வருமானம் இருந்தால், நிச்சயம் வருமான வரி செலுத்தி ITR தாக்கல் செய்ய வேண்டும். இதனால் கடந்த சில நாட்களாகவே வருமான வரி கணக்கு ரிட்டர்ன் செய்வோர் இணையதளத்தில் சில சிக்கல்கள் எதிர்கொண்டனர். இந்நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாளான நேற்று (செப்டம்பர் 15) வருமான வரி இணையதளம் முடங்கியதால் செப்டம்பர் 16 இன்று ஒரு நாள் மட்டும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை 7.30 கோடிக்கும் மேற்பட்ட ஒரு கணக்கு தாக்கல் செய்துள்ளனர். அபராதம் இல்லாமல் கணக்குகளை இன்று ஒரு நாள் தாக்கல் செய்யலாம். 2023-24 ஆம் நிதியாண்டில் 7.28 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
