லோகேஷ் கனகராஜ் கைவசம் வைத்திருக்கும் அடுத்தடுத்த படங்கள்.. இந்தப் PAN-இந்தியா நடிகருமா இந்த list-ல இருக்காரு.!

By Ranjith Kumar

Published on:

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் முதன்முதலில் வங்கியில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக குறும்படங்களை இயக்கத் தொடங்கினார். அதன்பிறகு ஒரு கதையை உருவாக்கி பல தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார். யாரும் அவரது கதையை எடுப்பதற்கு முன்வரவில்லை பின்னர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் லோகேஷியும் அவரது கதையையும் நம்பி படம் தயாரிக்க ஒப்புக்கொண்டது.

அப்படி உருவான திரைப்படம் தான் மாநகரம். அழகான திரைக்கதையை குறைவான பட்ஜெட்டில் அமைத்து ரசிகர்களை கவர்ந்தார். எந்த இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனர் ஆனார். அதன்பின்னர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற திரைப்படத்தை இயக்கி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தார். ஒரே இரவில் நடக்கும் ஒரு கதைக்கு மிகவும் சிறப்பான கதை அம்சத்தை கொடுத்திருந்தார் லோகேஷ் கனகராஜ்.

   

அதைத் தொடர்ந்து நடிகர் விஜயை வைத்து ‘மாஸ்டர்’ திரைப்படம் ,கமல்ஹாசனை வைத்து ‘விக்ரம்’ திரைப்படம் போன்றவற்றை இயக்கி மிகவும் பிரபலமானார். லோகேஷின் படங்களை ‘லோகேஷ் யுனிவர்ஷ்’ என ரசிகர்கள் கூறத் தொடங்கினார்கள். சமீபத்தில் இவர் நடிகர் விஜயை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து ரஜினியின் தலைவர் 171 படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் இந்தியா அளவில் ஃபேன் இந்தியா ஸ்டார்களை வைத்து இன்னும் பல படங்களை இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் மீண்டும் கார்த்தி உடன் இணைந்து கைதி 2 படத்தை இயக்க உள்ளார், இப்படத்தை ட்ரீம் வாரியர் தான் தயாரித்து வெளியீடு உள்ளதாம். அதற்கடுத்ததாக சூர்யாவை வைத்து நீண்ட நாள் பேசிக் கொண்டிருந்த “இரும்பு கை மாயாவியை” இயக்க உள்ளாரார்.

அதன் பின்னதாக தெலுகு ப்ரொடக்ஷனான KVB தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இரண்டு படங்கள் தயாரித்து உள்ளார், அதில் ஒன்று பிரபாஸ் மற்றும் ஜூனியர் NTR அவர்களின் வைத்து இயக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படங்களை முடித்துவிட்டு அதற்கடுத்தவாறு லொகேஷன் நீண்ட கனவான விக்ரம் 2 End game இயக்க உள்ளார். இதுவே லோகேஷ் படங்களின் பட்டியலாகும்.

author avatar
Ranjith Kumar