“சிலை கரைப்பின் போது ஆற்றில் இறங்கிய இளைஞர்கள்…” சப்-இன்ஸ்பெக்டர் அறைந்ததால் வெடித்த பெரும் சர்ச்சை… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் வைரல் வீடியோ….!!

By Devi Ramu on ஐப்பசி 21, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியில், சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஆற்றில் இறங்க முயன்ற இளைஞர்களைக் காவல் ஆய்வாளர் அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் தீயாய் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஆற்றில் இறங்கக் கூடாது என்று தடுத்ததுடன், வெளியே வந்த இளைஞர்களைச் சப்-இன்ஸ்பெக்டர் பி.கே. சர்மா ஆவேசமாக அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

தாக்கப்பட்டவர்கள் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததும் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்தச் சப்-இன்ஸ்பெக்டர் உடனடியாகச் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். காவல் அதிகாரியின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் நெட்டிசன்கள் தீவிர விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.