இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகவும் அபாரம். எந்த அளவு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதோ அந்த அளவுக்கு இளம் தலைமுறைகள் கெட்டுப் போயிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் கையில் ஒரு போனில் எல்லாமே அடக்கமாக இருக்கிறது எல்லாமே கிடைக்கிறது. எது நல்லது எது கெட்டது என்று அறியாத வயதில் இருப்பதால் சில தவறான விஷயங்களில் சென்று மாட்டிக் கொள்கின்றார்கள்.

ஒரு சிலர் சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் போதைக்கு அடிமையாகி வாழ்க்கை நாசமாகி போகிறது. ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் எது போட்டாலும் அதுதான் சரி என நினைத்துக் கொண்டு அதையே பின்பற்றுகின்றனர். இந்த நேரத்தில் பெற்றோர்கள் விழிப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
இதுபோல ஒரு சம்பவம் சென்னை ஆவடியில் நடந்திருக்கிறது. சென்னை ஆவடியை சேர்ந்த 12 வயது மாணவர்கள் 4 பேர் டியூஷன் செல்வதாக கூறிக்கொண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்கு அரசு பேருந்தில் ஏறி கிளம்பி இருக்கின்றனர். இதை கண்டறிந்த பெற்றோர்கள் பதறிப் போய் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.

இந்த அரசு பேருந்தை விரட்டி சென்ற காவல் அதிகாரிகள் அந்த நான்கு மாணவர்களை மீட்டுக் கொண்டு வந்திருக்கின்றனர். இதைப்பற்றி பேசிய காவல் ஆணையர் அவர்கள் மாணவர்களை எப்போதும் பெற்றோர்கள் கண்காணிப்புடன் வைத்திருக்க வேண்டும். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்து கொடுக்க வேண்டும். இன்றைய காலகட்டத்தில் மாணவர்கள் இப்படி எல்லாம் தைரியமாக யோசித்து செய்கிறார்கள் என்பது வருத்தமாக தான் இருக்கிறது என்று அவர் கூறியிருக்கிறார்.
