vel

18 ஆண்களுக்கு பிறகு திருச்செந்தூரில் நடந்த அதிசய நிகழ்வு… மகிழ்ச்சியில் பக்தர்கள்…

By admin on கார்த்திகை 6, 2024

Spread the love

திருச்செந்தூரில் தற்போது கடந்த ஒரு வாரமாக வெகு விமர்சையாக நடந்து வரும் ஒரு நிகழ்வு கந்த சஷ்டி. முருகப்பெருமாள் சூரபத்மனை வதம் செய்த நாள் தான் கந்தசஷ்டி ஆக பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பு ஆறு நாட்கள் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. கந்த சஷ்டியின் ஏழாவது நாள் சூரபத்மனை சுரசம்காரம் செய்யும் நிகழ்வு திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறும். எட்டாவது நாள் திருகல்யாண வைபவம் நடைபெறும்.

   

இந்த கந்த சஷ்டி விரதம் ஆனது மிகவும் பிரசித்தி பெற்றது. அசுரனின் அரசனான சூரபத்மன் தேவர்களை முனிவர்களையும் கொடுமைப்படுத்தும் போது அவர்களை வதம் செய்வதற்காக திருச்செந்தூரில் படைவீடு அமைத்து முருகப்பெருமான் போர் செய்தார். அவனுடன் ஏழு நாட்கள் போர் புரிந்தார். முருகப்பெருமாள் வெற்றி பெற வேண்டும் என்று அனைவரும் விரதமிருந்தனர். இதன் காரணமாகவே 7 நாட்களும் விரதம் அனுசரிக்கப்படுகிறது.

   

குழந்தை வரம் வேண்டுவோர் திருமணம் நடைபெற வேண்டும் என்று விரும்புவோர் தொழிலில் வெற்றி பெற வேண்டும் என அனைவரும் இந்த கந்த சஷ்டி விரதத்தை கடைபிடிக்கின்றனர். சூரசம்காரம் நடக்கும் நிகழ்வு கண்ணால் கண்டாலே மிகவும் புண்ணியம் என்று கூறுகிறார்கள். இந்த ஏழு நாட்களும் திருச்செந்தூரில் கடும் பக்தர் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அனைவரும் திருச்செந்தூரில் முருகப்பெருமானை தரிசிப்பதை சிறந்த பாக்கியம் என்று வழிபாடு செய்து வருகின்றனர்.

 

இந்நிலையில் திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு 18 வருடங்களுக்கு அடுத்து முருகப்பெருமானுக்கு வைரவேல் சாத்தி பூஜை நடைபெற்று வருகிறது. இந்த வைர வேலை கா பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து பூரிப்புடன் கண்டு ரசித்து செல்லுகின்றனர்.