உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட்டில் ஒரே இருசக்கர வாகனத்தில் 6 பள்ளி மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், நான்கு மாணவர்கள் பைக்கில் அமர்ந்திருக்க, ஐந்தாவது மாணவர் பின்னால் தொங்கியபடியும், ஆறாவது மாணவர் மற்றொரு மாணவரின் தோள் மீது அமர்ந்தபடியும் ஆபத்தான முறையில் செல்கின்றனர். பொதுச் சாலையில் போக்குவரத்திற்கு மத்தியில் நடைபெற்ற இந்த சாகசப் பயணம், மாணவர்களின் பாதுகாப்பையும் மற்ற வாகன ஓட்டிகளின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து, மீரட் போக்குவரத்து காவல்துறை உடனடியாக விசாரணையில் இறங்கியது. விதிமுறைகளைத் தகர்த்து ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக அந்த பைக் உரிமையாளருக்கு ரூ 25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்யவும், அதன் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழை ரத்து செய்யவும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவர்கள் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதற்குப் பெற்றோர் கண்காணிப்பு இல்லாததே முக்கியக் காரணம் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்துப் பேசிய போக்குவரத்து எஸ்பி ராஜேஷ் குமார் ஸ்ரீவாஸ்தவா, “சிறுவர்களுக்கு வாகனங்களைக் கொடுப்பது முற்றிலும் தவறானது. இதுபோன்ற ஆபத்தான சம்பவங்களுக்குப் பெற்றோரே முழுப் பொறுப்பு என்பதால் அவர்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…