இங்க காரே போகாது… இதுல ஆட்டோவா?… ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் பிரிட்டிஷ்… சுற்றுலாப் பயணிகளின் தெறிக்கும் சாகசம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

Spread the love

ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள ஸ்பிதி பள்ளத்தாக்கில் இங்கிலாந்தைச் சேர்ந்த இரு சுற்றுலாப் பயணிகள் ஆட்டோ ரிக்‌ஷாவில் பயணம் மேற்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கரடுமுரடான மலைப் பாதைகள் மற்றும் கடுமையான நிலப்பரப்பு கொண்ட இப்பகுதியில், வழக்கமான கார் அல்லது பைக்குகளுக்குப் பதிலாக ஆட்டோவைப் பயன்படுத்திய அவர்களின் முயற்சி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தாபோவிலிருந்து காசாவுக்குப் பயணம் செய்த விஷால் என்ற இந்தியக் காணொளிப் பதிவாளர் , வழியில் இந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைச் சந்தித்துள்ளார். ‘விஷால் எக்ஸ்பிரஸ்’ என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்த வீடியோவில், சுற்றுலாப் பயணிகள் தங்களின் இந்த சவாலான ஆட்டோ பயணத்தை மிகுந்த உற்சாகத்துடன் அனுபவிப்பதைக் காட்டியுள்ளார்.

https://www.instagram.com/reel/Dc3J4Lczgg6/?utm_source=ig_web_button_share_sheet

இந்த வித்தியாசமான இமயமலைப் பயணம் சமூக வலைதளங்களில் லச்சக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இலக்கை அடைவதை விட, பயணத்தின் போது சந்திக்கும் மனிதர்களும் அனுபவமுமே அதன் உண்மையான அழகு என்பதை இந்த சாகசப் பயணம் உணர்த்துவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

5 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

30 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

48 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

53 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

57 minutes ago