ஐயோ நெஞ்சே பதறுதே..! மாணவர்களின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநர்… அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ..!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love

சமூக வலைதளங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் காணொளி ஒன்று, பள்ளி மாணவர்களின் பாதுகாப்பற்ற பயணத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தப் பதிவில், ஒரு தனியார் பள்ளி பேருந்து மிகவும் மோசமான மற்றும் குழிகள் நிறைந்த சாலையில் அதிவேகமாகச் செல்வதைக் காணலாம். அந்தப் பேருந்தில் அதன் கொள்ளளவை விட அதிகமான மாணவர்கள் ஏற்றப்பட்டிருந்தனர். பல மாணவர்கள் பேருந்தின் கூரையின் மீது அமர்ந்தும், சிலர் பேருந்தின் பின்புறம் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டும் பயணிப்பது பார்ப்போரை பதறவைக்கிறது.

மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், போக்குவரத்து விதிகளை துளியும் மதிக்காமல் செயல்பட்ட அந்த ஓட்டுநரின் அலட்சியப் போக்கு பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்