2024- 25ஆம் கல்வியாண்டில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 29ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் முகவரி உருவாக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்கல்விக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், ஆன்லைனில் தயாராவதற்கு ஏதுவாகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி வழிகாட்டு திட்டத்தின் கீழ் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் உடனடியாக இதை செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
