ஆந்திர மாநிலம் சோமந்தூர்பள்ளியை சேர்ந்தவர் ஹர்ஷிதா(வயது 22). நேற்று முன்தினம் இவருக்கு, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நாகேந்திரன் என்பவர் உடன் பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்தி சென்றனர். இதை தொடர்ந்து மணமகள் வீட்டில் இளம் ஜோடிக்கு முதலிரவு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கிடையில் வீட்டிற்குள் சென்று, ஒரு அறையில் அடைத்து கொண்ட ஹர்ஷிதா வெகு நேரமாக வெளியே வராத நிலையில், சந்தேகம் அடைந்த உறவினர் கதவை தட்டிப் பார்த்து, திறக்கப்படவில்லை என்றவுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அங்கு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் மணபெண் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாபர். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தனர். உடலை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர், திருமண வீடு துக்க வீடானது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதலிரவில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் என்னெவென்று அறியாமல் மாப்பிள்ளை தவித்ததாக கூறப்படுகிறது.
