9 – 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இது இல்லாமல் இனி பொது தேர்வு எழுத முடியாது… வெளியான முக்கிய அறிவிப்பு..!

By Srimathi on ஆவணி 16, 2025

Spread the love

2026 ஆம் ஆண்டு CBSE பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இது மாணவர்கள் தேர்வு முறையை மாற்றும் மற்றும் APAAR ID கட்டாயமாக்கப்பட்டது.

APAAR ID என்பது ஒரு தனித்துவமான டிஜிட்டல் அடையாள எண். இதில் உங்கள் மதிப்பெண் சான்றிதழ்கள், பிற சான்றிதழ்கள் மற்றும் பிற கல்வி ஆவணங்கள், நிரந்தரமாகச் சேமிக்கப்படும். இதன் மூலம், போலி சான்றிதழ்கள் மற்றும் நகல் பதிவுகள் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். “ஒரு நாடு, ஒரே மாணவர் ID” என்ற தேசிய கல்விக் கொள்கை  அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவரும் APAAR ID வைத்திருக்க வேண்டும். பள்ளிகள் 9 – 12 ஆம்  வகுப்பு வரை, அனைத்து மாணவர்களை தேர்வு செய்வதற்கு முன், APAAR ID-களை உருவாக்க வேண்டும். பள்ளிகள் UDISE+ போர்டல் மூலம் மாணவர்களின் ஒப்புதலுடன்  APAAR ID-யை உருவாக்க வேண்டும். 2025-26 ஆம் ஆண்டு, தேர்வு மற்றும் பதிவு கட்டணங்களை CBSE வாரியம் 6.66% அதிகரித்துள்ளது.

   

இந்தியாவில் CBSE தேர்வு கட்டணம் :

   
  • 5 பாடங்கள்: ரூ. 1600
  • 1 பாடம் (10 மற்றும் 12 ஆம் வகுப்பு): ரூ. 320
  • 9 , 11 ஆம் வகுப்பு பதிவு கட்டணம்: ரூ. 320
  • 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு கட்டணம்: ரூ. 160

நேபாளத்தில் CBSE தேர்வு கட்டணம் :

 
  • 5 பாடங்கள்: ரூ. 5500
  • செய்முறைத் தேர்வு கட்டணம்: ரூ. 175
  • 1 பாடம்: ரூ. 1100
  • பதிவு கட்டணம்: ரூ. 550 அல்லது ரூ. 660

பிற நாடுகளில் CBSE தேர்வு கட்டணம் :

  • 5 பாடங்கள்: ரூ. 11,000
  • 1 பாடம்: ரூ. 2200
  • செய்முறைத் தேர்வு கட்டணம்: ரூ. 375
  • பதிவு கட்டணம்: ரூ. 550 அல்லது ரூ. 660

APAAR ID உடன் இணைக்கப்பட்ட AI மையம், தொழில்நுட்பக் கல்வியில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்த மாற்றங்கள் கல்வி நிர்வாகத்தை உயர்த்தி, மாணவர் பயணத்தை எளிதாக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டுள்ளன.