அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த மாணவர்களுடைய விவரங்களை அக். 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை கெடு விதித்துள்ளது. ஆசிரியர்கள் பதிவிடும் தகவல்களின் அடிப்படையில் மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
