பொள்ளாச்சி அருகே ஆசிரியை கண்டித்ததால் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் மூன்று பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள கஞ்சம்பட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் காலாண்டு தேர்வு நடைபெற்ற வருவதால் நேற்று வழக்கம்போல மாணவ மாணவிகள் பள்ளிக்குச் சென்றனர். அப்போது அங்கு வந்த ஒன்பதாவது படிக்கும் மூன்று மாணவிகளிடம் பள்ளி ஆசிரியை ஒருவர் காதல் வேலைகளில் மாணவிகள் ஈடுபட்டு இருப்பதாக கூறி கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து மாணவிகள் பேசியபோதும் ஆசிரியை தொடர்ந்து அவர்களை கடுமையாக திட்டி உள்ளார்.
இதனால் மணமுடைந்த மூன்று மாணவிகளும் பள்ளியின் வெளியே சாணி பவுடர் குறித்து தற்கொலைக்கு முயன்ற உள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே மாணவிகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் அங்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடனே இது குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த பெற்றோர்கள் அங்கிருந்து ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…