“அப்பா, அம்மா தூங்கிட்டு இருக்காங்க”… அழுகிய சடலத்துடன் 4 நாட்கள் இருந்த மகன்… மனதை ரணமாக்கும் கொடூர சம்பவம்…!

Spread the love

டெல்லி ஜாமியா நகரில் இசைப்பள்ளி ஆசிரியர் (70) ஒருவர் தன்னுடைய மனைவி (65), மகன் (45) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். மகனுக்கு மனநிலை சரியில்லாத காரணத்தால் அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ள நிலையில் அவர் பாங்காங்கில் வசித்து வருகின்றார். இந்நிலையில் அவர் தன்னுடைய தொலைபேசி மூலம் பெற்றோருக்கு தொடர்பு கொண்ட நிலையில் அழைப்பை எடுக்கவில்லை. தொடர்ந்து மூன்று நாட்கள் போன் செய்தும் எடுக்காததால் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தனது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு நேரில் சென்று விசாரிக்க கூறியுள்ளார்.

உறவினர் வீட்டுக்கு சென்று பலமுறை கதவை தட்டியும் திறக்காததால் அவரின் சகோதரர் பேச்சு குரல் மட்டுமே கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது உள்ளே ஒரு அறையில் அவரின் தாயார் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரின் உடல் அழுக தொடங்கி இருப்பது தெரிய வந்தது.

மேலும் அவரின் தந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் படுக்கையின் கீழே கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நான்கு நாட்களாக எதுவும் சாப்பிடாமல் இறந்த உடலுடன் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட மகனை விசாரித்த போது, அப்பா அம்மா இருவரும் தூங்கிக் கொண்டு இருக்காங்க என்று சொல்லி உள்ளார். உயிரிழந்த தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது

Nanthini

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

2 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

2 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

2 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

3 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

3 மணத்தியாலங்கள் ago