அன்று நீட் தேர்வில் தோல்வி… இன்று 72.2 லட்சம் சம்பளத்தில் rolls-royce நிறுவனத்தில் வேலை… இளம்பெண் 20 வயதில் சாதித்தது எப்படி..??

By Soundarya on ஆடி 17, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்தவர் மாணவி ரிதுபர்ணா. 20 வயதான இவர் அடியாரில் உள்ள சாயாத்ரி என்ற பொறியியல் கல்லூரியில் ரோபட்டிக் ஆட்டோமேஷன் பிரிவில் இறுதி ஆண்டு படித்து வருகிறார் . இவருக்கு ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் வருடத்திற்கு 72.2 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது. இதனால் கர்நாடகா சட்டப்பேரவை தலைவர் சயாத்ரி கல்லூரிக்கு சென்று அவரை பாராட்டியுள்ளார். முதலில் டாக்டராக விரும்பிய இவர் நீட் தேர்வு எழுதியுள்ளார். அவருக்கு அரசு கல்லூரியில் இடம் கிடைக்காததால் பொறியியலை தேர்வு செய்து படித்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனம் rolls-royce intership செய்ய வாய்ப்பை பெற்றுள்ளார். ஒரு மாதத்தில் முடிக்கக்கூடிய வேலைகளை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.  இதை இரவு பகலாக உழைத்து ஒரே வாரத்தில் கொடுத்துள்ளார். இவருடைய திறனை பார்த்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வருடத்திற்கு 72.3 லட்சம் சம்பளத்தில் அவருக்கு பணி வாய்ப்பை வழங்கியுள்ளது. இதன் மூலமாக 20 வயதில் மதிப்பு மிக்க நிறுவனத்தில் பணி செய்யும் இளம் பெண் என்ற சாதனை படைத்துள்ளார்.