சீனாவின் ஜியாடிங் பகுதியில் வசித்து வருபவர் வாங். 66 வயதான இவர் தனியாக வசித்து வருகிறார். ஆன்லைன் ஷாப்பிங் செய்வதை பொழுதுபோக்காக கொண்டுள்ளார் . வீட்டில் எங்கு பார்த்தாலும் ஆன்லைனில் வாங்கப்பட்ட பொட்டலங்கள் தான் இருக்குமாம். பொருட்களை வைப்பதற்கு மற்றொரு வீட்டையும் வாடகைக்கு எடுத்து வாங்கிய பொருட்களை குவித்து வைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், ” குடும்பத்தினர் தன்னிடம் பணம் கேட்டு பிச்சை எடுப்பதை தடுப்பதற்காக பணத்தை இப்படி வீணாக்க விரும்புகிறேன்.
நான் பணக்காரர் என்ற தோற்றம் வரக்கூடாது என்பதற்காக எல்லா பணத்தையும் சாமான்கள் வாங்குவதில் கழித்து விட்டேன். என்னுடைய வீட்டில் பொருட்கள் குவியல்களாக பார்க்கும்போது என்னிடம் கடன் கேட்பது பொருத்தம் மற்றது என்று நினைத்து அவர்கள் என்னிடம் கடன் கேட்க மாட்டார்கள். மற்றவர்கள் தன்னிடம் இருந்து கடன் வாங்குவதை தடுப்பதற்கு ஷாப்பிங் பணத்தை செலவிட முடிவு செய்தேன்” என்று கூறியுள்ளார்.
