“அம்மா… என்னை அடிச்சுட்டாங்க, மார்பில் குத்துறாங்க…” நள்ளிரவில் வந்த கதறல் அழைப்பு…  காதலனுடன் தங்கிய மாணவி இறப்பு… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 27, 2026

Spread the love

அசாம் மாநிலம் கௌஹாத்தி பல்கலைக்கழகத்தில் சமூகவியல் படித்து வந்த 21 வயதான மாணவி நிமிஷா தாகுரியா, கடந்த செப்டம்பர் 25 அன்று மாலை விடுதியில் தங்குவதாக வீட்டிடம் கூறிவிட்டு வெளியேறியுள்ளார். ஆனால், அவர் அஷிக் அலி (26) என்ற வாலிபருடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேயில் தங்கியுள்ளார். இந்நிலையில், அதிகாலை 2 மணியளவில் தாய்க்கு போன் செய்த நிமிஷா, “அம்மா… என்னைச் சிலர் தாக்கி மார்பில் குத்துகிறார்கள்” என அழுது கதறியுள்ளார்.

அதற்குள் அழைப்பு துண்டிக்கப்படவே, பதறிய பெற்றோர் போலிஸாரை அணுகினர். போலிஸார் செல்போன் டவர் இருப்பிடத்தை வைத்துத் தேடியபோது, கரால் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு பெண் மயங்கிய நிலையில் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. பெற்றோர் அங்கு சென்று பார்த்தபோது, நிமிஷா பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். நிமிஷாவை அஷிக் அலி மற்றும் இரு இளைஞர்கள் அதிகாலை 4.30 மணிக்கு மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.

   

நிமிஷா தூக்கில் தொங்கித் தற்கொலை செய்துகொண்டதாக அஷிக் அலி கூறியபோதிலும், மாணவியின் உடலில் காயங்கள் இருப்பதை போலிஸார் கண்டறிந்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலையில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டதால் விமான நிலையச் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலிஸார் அஷிக் அலையைக் கைது செய்து, விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஹோம்ஸ்டேவை சீல் வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.