உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டம் ஆலம்பூர் எஹ்த்வா பகுதியில் உள்ள கரும்புத் தோட்டம் ஒன்றில், செப்டம்பர் 23 அன்று எாிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவாின் சடலமும், அதன் அருகே 3 வயதுச் சிறுமி ஒருத்தி படுகாயங்களுடன் கதறி அழுது கொண்டிருந்ததும் கண்டெடுக்கப்பட்டது. போலிஸாரின் விசாரணையில், சமூக வலைதளங்களில் பரவிய புகைப்படத்தைக் கண்டு வந்த கணவர் அனில் குமார், இறந்தது தனது மனைவி உஷா (25) என்றும், படுகாயமடைந்த குழந்தை தனது 3 வயது மகள் என்றும் அடையாளங் காட்டினார்.
விசாரணையில், உஷாவுக்கும் அவரது மாமா மகனான நீரஜ்க்கும் இடையே தவறான உறவு இருந்தது தெரியவந்தது. நீரஜை தனது மனைவியைப் விவாகரத்து செய்துவிட்டுத் தன்னுடன் வந்து வாழுமாறு உஷா கட்டாயப்படுத்தியதால், அவரைத் தீர்த்துக்கட்ட நீரஜ் திட்டம் தீட்டியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 22 இரவு, சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி உஷா, அவரது 3 வயது மகள் மற்றும் 1.5 வயது மகன் பிரியான்ஷு ஆகியோரைப் பிக்கப் வாகனத்தில் அழைத்துச் சென்ற நீரஜ், உஷாவையும் 3 வயது மகளையும் நெரித்துக் கொன்று கரும்புத் தோட்டத்தில் கம்பளியைப் போர்த்தித் தீ வைத்துள்ளார். ஆனால், 3 வயது சிறுமி அதிர்ஷ்டவசமாக உயிருடன் தப்பினார். தனக்கு ஆண் குழந்தை இல்லாததால், உஷாவின் 1.5 வயது ஆண் குழந்தையைக் கொலை செய்யாமல் வீட்டிற்கு எடுத்துச் சென்று வளர்க்க முயன்ற நீரஜை போலிஸார் கைது செய்து, குழந்தையை மீட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
