ஜெர்மனி எசென் நகரில் அமைந்துள்ள தொழில் கல்வி பள்ளியில் 17 வயதுமிக்க மாணவன் ஒருவன் அவனுடைய 45 வயது உடைய ஆசிரியரை கத்தியால் பலமுறை குத்தி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அச்சிறுவனை கைது செய்யும் போது காவல்துறையினரால் சுடப்பட்டு காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம் நேற்று காலை நடைபெற்ற நிலையில் காயம் அடைந்தவுடன் அச்சிறுவன் அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டான்.
போலீசார் இதை தொடர்ந்து ஆசிரியரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தப்பித்து ஓடிய சிறுவனை தீவிரமாக தேடி வந்த போலீசார் காலை 11:15 மணிக்கு கண்டுபிடித்தனர். அச்சிறுமனை பிடிக்க முயற்சி செய்தபோது காவலர்களையும் கத்தியால் தாக்க முயற்சித்ததால் காவலர்கள் துப்பாக்கியை பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளனர். பின்பு அந்தச் சிறுவனையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார்களாம். 17 வயது சிறுவன் செய்த செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
