வாட்ஸ் அப்பில் வந்த ஆபாச வீடியோ… நண்பன் வீட்டில் நிர்வாணமாக கிடந்த பெண்ணின் உடல்… கழுத்தில் இறுக்கப்பட்டிருந்த கயிறு… வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், 24 வயது எம்பிஏ மாணவி குஷ்பு ராத்தோர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை தனது வகுப்புத் தோழர் பியூஷ் தனோதியாவின் பிறந்தநாள் விழாவிற்குச் சென்ற மாணவி, அதன்பின் வீடு திரும்பவில்லை. வெள்ளிக்கிழமை அன்று, பியூஷின் வாடகை வீட்டிலிருந்து வீசிய துர்நாற்றம் குறித்து அக்கம் பக்கத்தினர் புகார் அளித்ததையடுத்து, அங்கு சென்ற போலீசார் கதவை உடைத்து சோதனையிட்டபோது, மாணவியின் உடல் நிர்வாணமான நிலையில், மிகவும் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

மாணவியின் கழுத்தில் கயிறு தடயங்கள் இருந்ததால், அவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையுண்ட மாணவியின் கல்லூரி வாட்ஸ்அப் குழுவில், அவரது முகத்துடன் கூடிய ஆபாச வீடியோ ஒன்று பதிவேற்றப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வீடியோவில் இருந்த மற்றொரு நபரின் முகம் எமோஜிகளால் மறைக்கப்பட்டிருந்தாலும், அவர் பியூஷ் தனோதியாவாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தலைமறைவாக உள்ள பியூஷை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.