அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை..! ஓடும் லாரியில் இருந்து கார் மீது விழுந்த கண்டெய்னர்… மென்பொறியாளர் உடல் நசுங்கி பலி…!!

By Soundarya on மாசி 14, 2026

Spread the love

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஓடும் லாரியிலிருந்து கண்டெய்னர் கவிழ்ந்து கார் மீது மோதிய விபத்தில், 32 வயது மென்பொருள் பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டம் ராமபுரம் கிராமத்தைச் சேர்ந்த அனுதீபக் என்பவர் நேற்று தனது காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி ஓட்டுநர் ஒரு பைக் ஓட்டுநரைக் காப்பாற்ற முயன்று திடீரென காரைத் திருப்பியுள்ளார். இதில் நிலைதடுமாறிய லாரி சாலை தடுப்பில் ஏறியதால், அதிலிருந்த ராட்சத கண்டெய்னர் பெட்டி எதிர் திசையில் வந்த அனுதீபக்கின் கார் மீது விழுந்து நசுக்கியது.

இந்த கோர விபத்தில் அனுதீபக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளதோடு, லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். விபத்தில் சிக்கிய பைக் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து சித்தூர் போக்குவரத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.