மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகேயுள்ள எம்.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநரின் 15 வயது மகன், விருதுநகர் – மதுரை சாலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், வகுப்பில் சமூக அறிவியல் ஆசிரியரான குமார் என்பவர், சக மாணவர் ஒருவரைப் பிரம்பால் தாக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாகப் பிரம்பு இந்த மாணவனின் இடது கண்ணில் பலமாக பட்டது.
இந்தத் தாக்குதலில் மாணவனின் கண்ணின் கருவிழி பாதிக்கப்பட்டு இரத்தம் கொட்டியது. உடனடியாக விருதுநகரில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, உடனடியாகச் சிகிச்சை தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, மாணவனைப் பெற்றோர் மதுரையில் உள்ள பிரபல கண் மருத்துவமனையில் அனுமதித்து அறுவை சிகிச்சை செய்தனர்.
ஆனாலும், கண்ணில் உள்ள கண்திரை மற்றும் நரம்புகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவனுக்கு இடது கண்ணில் பார்வை திரும்புவது சிரமம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, மாணவனின் தந்தை விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஆசிரியர் குமார் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மீதும் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு ஆசிரியரின் பொறுப்பற்ற செயலால் மாணவன் தனது கண்பார்வையை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…
கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…
நீலகிரி மாவட்டம் பில்லூர்மட்டம் சடையன் கொம்பை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் திடீரென காணாமல் போனதாக கடந்த…
டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…
சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…