கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் சாக்கோ. 20 வயதான இவர் தன்னுடைய உறவினரின் வீட்டில் தங்கியிருந்து தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் இரண்டாம் வருடம் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கல்லூரி நிர்வாகத்தின் மீது புகார் அளிக்க குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு வந்த அவர் புகார் அளித்துவிட்டு திடீரென்று காவல் நிலையத்திலேயே மயங்கி விழுந்தார். இதை கண்டதும் அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் கேட்ட பொழுது கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்து பினாயில் மற்றும் எலி மருந்து கலந்து குடித்து விட்டதாக கூறியிருக்கிறார்
இதனையடுத்து அவருக்கு முதலுதவி அளித்துவிட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளார்கள். பிறகு இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் கல்லூரியில் படித்து வந்த மாணவன் ஜான் சாக்கோ வகுப்பறையிலேயே தான் காதலிக்கும் பெண்ணிடம் செல்போனில் வீடியோ கால் பேசியதால் இது குறித்து பேராசிரியர்கள் கண்டித்த நிலையில் மீண்டும் அதேபோல அவர் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கள்ளஓரிக்கு வரக்கூடாது எனவும் வீட்டிலிருந்தே தேர்வு எழுமாறும் கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து தற்போது மூன்றாம் ஆண்டு படிப்பதற்காக கல்லூரிக்கு வந்தபோது உள்ளே அனுமதிக்காததால் அவர் பினாயில் மற்றும் எலி மருந்து குடித்துவிட்டு காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகம் மீது புகார் அளிக்க வந்தபோது மயங்கி விழுந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை த்ரிஷா, மூத்த நடிகை ராதிகா சரத்குமாருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார். சாதாரணமாகப்…
இந்தியத் திரையுலகின் முன்னணி மூத்த நடிகரும், சமூக ஆர்வலருமான நானா படேக்கர் (75) கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென…
டெல்லி அசோகா ஹோட்டல் வளாகத்தில் உள்ள 'SOHO' கிளப்பிற்கு வெளியே, அக்டோபர் 4-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நாகாலாந்தைச்…
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவும், அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டவும் ஈரான் வெறும் வாய்மொழி வாக்குறுதிகளை மட்டும்…
நேற்றைய தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 வரை உயர்ந்து அதிர்ச்சியளித்த நிலையில், இன்று தங்கம் விலையில் எந்தவித…
திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பதிவு செய்த…