சமீபத்தில் போதை பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் போதை பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு ட்ரக் சப்ளை செய்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் சினிமா துறையில் போதை பொருளின் பயன்பாடு அதிகமாக இருப்பதாக நடிகை குஷ்புவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர், “சும்மா எல்லாத்தையும் பூத கண்ணாடி வைத்து பார்க்காதீர்கள். 3000 கிலோ சிக்கினால் அதை எல்லாமே சினிமா துறையில் சம்பந்தப்பட்டது என்று சொல்ல முடியாது.
சினிமாவில் இரண்டு பேர் கைதானதும் உடனே சினிமாவில் போதைப் பொருள் அதிகமாகிவிட்டது என்று சொல்வீர்களா? நீங்கள் எத்தனை பேரை பார்த்தீர்கள்? ஒருவர் போதைப் பொருளுக்கு அடிமையானால் ஏன் ஆகிறார் என்று தான் பார்க்க வேண்டும். சினிமா நடிகர்களும் மனிதர்கள்தான். சினிமாவில் இப்படி நடந்தால் ,ஒரு விவகாரத்து நடந்தால் உடனே பூத கண்ணாடி வைத்து பார்க்கிறீர்கள். பிரச்சனையை பெரிதாக்காதீர்கள் . தீர்க்க பாருங்கள்” என்று காட்டமாக பதில் அளித்துள்ளார்
பீகார் மாநிலம் மொகாமா தொகுதி ஜேடியூ எம்.எல்.ஏ-வும், அம்மாநில அரசியலில் 'சோட்டே சர்க்கார்' என்று அழைக்கப்படுபவருமான அனந்த் சிங், படுக்கையில்…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் பகுதியில் உலா வந்த நபர் ஒருவர், தான் பாகிஸ்தானைச் சேர்ந்த 'ஹமீத் அன்சாரி' என்றும்,…
மகாராஷ்டிர மாநிலம் பன்வேலைச் சேர்ந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஆதிவாசி குடும்பத்தைச் சேர்ந்த பாலி என்ற 5 வயதுச் சிறுவன்,…
பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது தலைக்கவசத்தில் சிறிய கேமராவைப் பொருத்திப் பயணிக்கும் வீடியோ இணையத்தில்…
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக ராஜினாமா செய்யக் கோரி, 'இந்தியா' கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் தில்லி ஜந்தர்…
சாலையில் அலைந்து திரிந்த எருது ஒன்று திடீரென குறுக்கே பாய்ந்ததில், அவ்வழியாக அதிவேகமாக வந்த இருசக்கர வாகன ஓட்டி தூக்கி…