“உங்களுக்கும் பாய்ஃபிரண்ட் வேணுமா?”… இந்தூர் விடுதியில் சக மாணவிகளை வற்புறுத்திய மாணவி… அதிர்ச்சி பின்னணி…!!!

Spread the love

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தோரில் உள்ள தேவி அகில்யா விஸ்வவித்யாலயா பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவி ஒருவர், சக மாணவிகளைத் தவறான பாதைக்குத் தூண்டிய புகாரில் விடுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தரவு அறிவியல்  முதலாம் ஆண்டு பயிலும் அந்த மாணவி, மற்ற மாணவிகளையும் தங்களுக்கு என்று காதலர்களை உருவாக்கிக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தியதாகவும், அறிமுகமில்லாத நபர்களுடன் மொபைல் செயலிகள் மூலம் வீடியோ கால் பேச வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விடுதி காப்பாளரிடம் ஐந்து மாணவிகள் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. விடுதி காப்பாளர் நடத்திய சோதனையில் அந்த மாணவியின் அறையிலிருந்து சில ஆட்சேபனைக்குரிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழக நிர்வாகம் ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அந்த மாணவி மீதான புகார்கள் குறித்து இந்தக் குழு விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தச் சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Rajeshwari

Recent Posts

அதிரடி ரெய்டு..! அரசு அலுவலகத்தில் நடந்த அட்ராசிட்டி… கையும் களவுமாக மாட்டிய இன்ஜினியர்… மின்வாரியத்தில் லஞ்ச வேட்டை… அலறவிட்ட பகீர் சம்பவம்…!!

ஷம்ஷாபாத் மின்வாரிய துணை நிலையத்தில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை…

15 minutes ago

கொலையா?.. மர்மம் விலகுமா?…நடுரோட்டில் இதயம் கிடந்த விபரீதம்… நேரில் பார்த்தவர்கள் பகீர் வாக்குமூலம்… நடந்தது என்ன?…!!

தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டம் சின்ன வாங்காரா புறவழிச்சாலை பகுதியில் மனித உறுப்புகள் போன்ற பாகங்கள் சாலையில் கிடந்த சம்பவம்…

24 minutes ago

“பார்த்ததும் வாந்தி வந்துடுச்சு!”… அரங்கேறிய அஜாக்கிரதை… நொடியில் ஆடிப்போன பெண்…பிரபல பர்கர் கடையில் நடந்த பயங்கரம்…!!

தலைநகர் டெல்லியின் கன்னாட் பிளேஸ் பகுதியில் அமைந்துள்ள பிரபல 'பர்கர் சிங்' உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு அதிர்ச்சியளிக்கும் அனுபவம் ஏற்பட்டுள்ளது.…

30 minutes ago

என்ன நடக்கிறது அங்கே?… திடீரென கொந்தளித்தது ஏன்?… பேரலைகளின் ஆக்ரோஷ தாண்டவம்… வெளியான பகீர் காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சூர்யலங்கா கடற்கரையில் தற்போது எதிர்பாராத விதமாகப் பெரும் பதற்றமும் குழப்பமான சூழலும்…

36 minutes ago

SI-க்கு திடீரென என்னாச்சு?… அமர்ந்தபடியே மர்ம மரணம்… காவல் நிலையத்தில் உறைந்த சக காவலர்கள்… போலீஸ் ஸ்டேஷனில் பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள பகதூர்கட் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த லட்சுமண் சிங்,…

41 minutes ago

உடன்பிறப்பா அல்லது எதிரியா?… “என் புருஷனை விட்ருங்க”.. கதறிய மனைவி… குடும்பமே சேர்ந்து செய்த கொடூரம்… மோதலில் நடந்த பகீர் சம்பவம்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா பகுதியில் குடும்பச் சொத்து தொடர்பான நிலத் தகராறு, உடன் பிறந்த சகோதரர்களுக்கு இடையே பெரும்…

48 minutes ago