உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தைச் சேர்ந்த விஷால் வர்மா என்ற 20 வயது மாணவர், புனேவில் உள்ள ஒரு கல்லூரியில் மரைன் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை, கல்லூரி வளாகத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அங்கிருந்த கூடைப்பந்து (Basketball) கம்பம் அவர் மீது சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த விஷால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தனது மகனை ஒரு சிறந்த பொறியாளராக மாற்ற வேண்டும் என்ற கனவோடு, கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் ரூபாய் வரை தந்தை பாபுராம் வர்மா கட்டணமாகச் செலுத்தியுள்ளார். “எந்தக் கல்லூரியில் என் மகனின் எதிர்காலம் சிறப்பாக அமையும் என்று நம்பினேனோ, அதே கல்லூரி இன்று அவனது கல்லறையாக மாறிவிட்டது” என்று அவர் கதறி அழுவது பார்ப்போரை கண்கலங்கச் செய்துள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாட்டு மைதானத்தில் இருந்த அந்த இரும்புக் கம்பம் சரியாகப் பராமரிக்கப்பட்டதா அல்லது அதன் உறுதித்தன்மையில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்பது குறித்து மாணவர்களிடமும் கல்லூரி நிர்வாகத்திடமும் வாக்குமூலம் பெறப்பட்டு வருகிறது. ஒரு திறமையான மாணவன் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…
சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…
ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…
தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…