தேசிய போட்டியில் பங்கேற்க இருந்த மாணவர்…. துப்பாக்கியால் சுட்டு தற்கொலை…. கதறிய பெற்றோர்… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on ஐப்பசி 16, 2025

Spread the love

மதுரை கோ.புதூர் பகுதியை சேர்ந்த வடிவேலன் என்பவர் தனியார் வங்கியில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் துப்பாக்கி சுடும் வீரராகவும் உள்ளார். இவரது மனைவி கிருத்திகா. இவர்களது மூத்த மகன் இவன் நவநீதன் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். யுவநவநீதன் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெற்று வந்தார். நவநீதனுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாததால் பெற்றோர் அவரை கண்டித்தனர்.

நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் நவநீதன் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு உபயோகப்படுத்தும் ஏர் ரைபிள் வகை துப்பாக்கியை பயன்படுத்தி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர் மகன் உடலை கண்டு கதறி அழுதனர்.

   

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நவநீதனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நவநீதன் மாநில துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய போட்டிக்கு தகுதி பெற்றார். டிசம்பர் மாதம் உத்தர பிரதேசத்தில் நடக்க உள்ள அந்த போட்டியில் நவநீதன் பங்கேற்க இருந்ததாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.