மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பள்ளியில் பகுதியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வந்துள்ளார். இதற்கிடையில் மாணவியை வகுப்பு ஆசிரியர் துன்புறுத்தி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாடம் சரியாக படிக்க வில்லை என்று கூறி மாணவி அந்த ஆசிரியர் கடுமையாக தாக்கியிருக்கிறார். மேலும் தண்டனை என்ற பெயரில் மாணவியை துன்புறுத்தி வந்தார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பிளஸ் ஒன் மாணவி கடந்த 16ஆம் தேதி அன்று இரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் .
மேலும் தன்னுடைய தற்கொலைக்கு ஆசிரியரின் துன்புறுத்தல் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து அறிந்து வந்த காவல் துறையினர் மாணவி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றி அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
