இதுக்கெல்லாம் தற்கொலை ஒரு தீர்வா..? “நான் விஷத்தை குடிச்சிட்டேன்மா” பிறந்தநாளுக்கு புது டிரெஸ் வாங்கி கொடுக்க மறுத்த பெற்றோர்… +1 மாணவி எடுத்த அதிர்ச்சி முடிவு…!!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love

பிறந்தநாளுக்கு புது டிரஸ் வாங்கி கொடுக்காததால் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே தம்மனம்பட்டியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி சங்கீதா. இவர்களுக்கு இரண்டு மகன்களும், பூவிகா என்ற 17 வயது மகளும் உள்ளார். இதில் பூவிகா கூடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார் .

இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி இவருக்கு பிறந்தநாள். அதற்கு பெற்றோர் புது டிரஸ் மற்றும் கேக் வாங்கி கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பூவிகா தன்னுடைய தாய் தந்தையிடம் புது டிரஸ் வாங்கி கொடுக்குமாறு சண்டை போட்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று காலை திடீரென்று பூவிகா வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து பெற்றோர் கேட்டபோது பிறந்தநாளுக்கு எதுவும் எனக்கு செய்யாததால் நான் விஷத்தை குடித்து விட்டேன் என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சடைந்த பெற்றோர் பூவிகாவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பூவிகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.