உயிரே போச்சே..! குறுக்கே வந்த பாம்பு சாகக்கூடாது என நினைத்து… 2 பிஞ்சுக் குழந்தைகள் பலியான சோகம்… கேரளாவில் அதிர்ச்சி…!

By Soundarya on கார்த்திகை 28, 2025

Spread the love

கேரள மாநிலம் பத்தனாம்திட்டா மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளை ஆட்டோ ஏற்றி சென்றுள்ளது. அப்போது ஆட்டோவின் முன்பு திடீரென்று பாம்பு ஒன்று குறுக்கே வந்துள்ளது. இதனால் பாம்பின் மீது ஏற்றி விடக்கூடாது என்பதற்காக ஆட்டோவை வேறு பக்கமாக ஓட்டுனர் திருப்பியுள்ளார். அப்போது ஆட்டோ புரண்டு பக்கத்தில் இருந்த வாழைத்தோட்டத்திற்குள் கவிழ்ந்துள்ளது.  இந்த விபத்தில் சிக்கி ஆட்டோவில் இருந்த பள்ளி மாணவ மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளார்கள்.

ஆட்டோ மேலே விழுந்ததில் ஆதிலட்சுமி (8), யது கிறிஸ்டின் (4 )ஆகிய இரண்டு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்கள். ஆட்டோ ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு குழந்தையை சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றுள்ளார்கள். பாம்பு குறுக்கே புகுந்து ஆட்டோவில் இருந்து இரண்டு பள்ளி குழந்தைகள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.