அட கடவுளே… சாலையோரம் மீன் விற்ற பெண்… கான்கிரீட் இயந்திரம் மோதி துடிதுடித்து பலி… திருச்சியில் அரங்கேறிய சோகம்…!

By Swetha on ஐப்பசி 15, 2026

Spread the love

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 47 வயதுடைய செல்வராணி. இவர், திருச்சி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையோரமாக மீன் கடை நடத்தி வந்த நிலையில், அதே வழியில் சரக்கு ஆட்டோவின் பின்னால் இணைத்துச் செல்லப்பட்ட கான்கிரீட் கலவை இயந்திரம் திடீரென கழன்று ஓடி விபத்து ஏற்படுத்தியது.

கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அந்த இயந்திரம் சாலையோரம் மீன் விற்றுக் கொண்டிருந்த செல்வராணி மற்றும் மீன் வாங்க வந்த மணிவேல் மீதும் மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்; காயமடைந்த மணிவேல் தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

   

இந்தச் சம்பவம் குறித்து தொட்டியம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தலைமறைவான சரக்கு ஆட்டோ டிரைவர் சந்திரனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.