BREAKING: தமிழ்நாடு முழுவதும் ஸ்டிரைக் அறிவிப்பு…. சற்றுமுன் ஷாக் நியூஸ்…!

By Nanthini on சித்திரை 26, 2026

Spread the love

தமிழ் திரையுலகில் நிலவும் தயாரிப்பு செலவு மற்றும் வருவாய் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், வருமானப் பகிர்வு (Revenue Sharing) அடிப்படையில் படங்களைத் தயாரிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மே 2-ம் தேதி அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்குப் பிந்தைய முதல் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

டிஜிட்டல் தளங்கள் மற்றும் திரையரங்க வருவாயில் தயாரிப்பாளர்களுக்கு உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்பதே இந்த போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக முன்வைக்கப்படுகிறது. இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக, மே 2-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த அனைத்து திரைப்படப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட உள்ளதால், கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.