இனிமேல் அவ்ளோதான்… சாட்டையை சுழற்றும் விஜய்.. டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த உத்தரவு… ஒரே நாளில் அதிரும் தமிழகம்…!

Spread the love

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் நோக்கில் முதல்வர் விஜய் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளார். கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்ற கையோடு போதைப்பொருள் தடுப்புப் பிரிவை உருவாக்கக் கோப்பில் கையெழுத்திட்ட அவர், நேற்று மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கு அல்லது கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில், முதற்கட்டமாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மாநிலத்திலுள்ள 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பைத் தொடர்ந்து, தலைநகர் சென்னையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், நேரக் கட்டுப்பாட்டை முறைப்படுத்தவும் சென்னை காவல் ஆணையர் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் ‘ஸ்ட்ரிக்ட்’ அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதன்படி, FL1 எனப்படும் சாதாரண மற்றும் எலைட் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் இரவு 10:00 மணிக்குள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அதேபோல, FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற பார் மற்றும் கிளப்/ஹோட்டல் பார்கள் முறையே இரவு 10:00 மணி மற்றும் நள்ளிரவு 12:00 மணிக்குள் ஒட்டுமொத்தமாகத் தங்களது சேவையை நிறுத்த வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரக் கட்டுப்பாடுகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கப் போலீசாருக்குக் கடுமையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ரோந்து வாகனங்கள் மற்றும் பீட் அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் கடைகள் மூடப்படுவதை நேரில் கண்காணித்து, அதனைப் புகைப்படம் எடுத்து அதிகாரப்பூர்வ போலீஸ் வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், FL2 மற்றும் FL3 பார்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் பார்களில் பாட்டில்களாக மது விற்கக் கூடாது, லூஸ் செல்லிங் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள் மீறப்பட்டு, அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி மதுக்கடைகளோ அல்லது பார்களோ இயங்கினால், அதற்குச் சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலைய அதிகாரிகளே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என கமிஷனர் எச்சரித்துள்ளார். கடமை தவறும் அதிகாரிகள் மீது கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் தனது உத்தரவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த அதிரடி மாற்றங்களும், அதைத் தொடர்ந்த காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Nanthini

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

3 மணத்தியாலங்கள் ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

3 மணத்தியாலங்கள் ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

4 மணத்தியாலங்கள் ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

4 மணத்தியாலங்கள் ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

4 மணத்தியாலங்கள் ago