போலீஸ் காரையே டார்கெட் செய்த வாலிபர்… கொல்கத்தா வீதிகளில் அரங்கேறிய சேஸிங்… வைரலாகும் வீடியோ…!!

By Devi Ramu on பங்குனி 21, 2026

Spread the love

கொல்கத்தாவின் பரபரப்பான வீதியில் வாலிபர் ஒருவர் அவ்வழியாகச் சென்ற வாகனங்கள் மற்றும் காவல் துறையினரின் கார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்திய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதைக் கண்ட அதிகாரி அந்த நபரைப் பிடிக்க முயன்றபோது, அவர் பிடியில் சிக்காமல் தப்பியோட, சினிமா பாணியில் துரத்தல் வேட்டை அரங்கேறியது. அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் ஒருவழியாக அந்த நபர் பிடிக்கப்பட்டார்.

இருப்பினும், பிடிபட்ட சில நொடிகளிலேயே காவல்துறையினரை ஏமாற்றிவிட்டு அந்த நபர் மீண்டும் ஓட்டம் பிடித்தது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விடாமல் துரத்திய அதிகாரி, ஒரு வாகன ஓட்டியின் உதவியுடன் அவரை மீண்டும் மடக்கிப் பிடித்தார். இந்தத் திக் திக் காட்சிகள் கார்ட்டூன் படங்களில் வருவது போல் நகைச்சுவையாக இருந்ததாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

   

 

View this post on Instagram

 

A post shared by Lj (@lj.in1tx)