தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சென்னை தி.நகர் அலுவலகத்தில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். திமுக கூட்டணியில் தனியரசுக்கு சீட் ஒதுக்கப்படாததால் அதிருப்தியில் இருந்த அவர், தற்போது அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி தவெக-வில் இணைய முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதன் ஒரு பகுதியாக அவருக்கு காங்கேயம் தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. ஏற்கனவே தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் 3 – 5 தொகுதிகளில் வேட்பாளர்களை மாற்றத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியான நிலையில், தனியரசுவின் இந்த வருகை கொங்கு மண்டல அரசியலில் புதிய சமன்பாடுகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
